பானி பூரி

பானி பூரி

அனைவருக்கும் பிடித்த வீட்டிலேயே மிகவும் எளிமையான  செய்ய கூடிய ஸ்நாக்ஸ்  ரெசிபி

பானி பூரி ஈசியாக வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

பூரி செய்வதற்கு

ரவை             –    1/2 கப்
மைதா           –    1/2 டேபிள் ஸ்பூன்
பேக்கிங் சோடா   –    1 சிட்டிகை
உப்பு             –     தேவையான அளவு

பானி செய்வதற்கு

கொத்தமல்லி     –  சிறிது
புதினா            – சிறிது
பச்சை மிளகாய்   – 2,3
புளி               –  தேவையான அளவு
எலுமிச்சை        -1
மிளகு             -2 டீஸ்பூன்
சீரகம்             – 2 டீஸ்பூன்
உப்பு              – தேவையான அளவு
தண்ணீர்           –  1  1/2  கப்

மசாலா செய்வதற்கு

உருளை கிழங்கு      -2 (வேகவைத்து மசித்தது )
மிளகாய் தூள்         – 1/2 டீஸ்பூன்
மிளகு தூள்           – டீஸ்பூன்
உப்பு                  – தேவையான அளவு
மிளகாய் தூள்         – 1 டீஸ்பூன்
ப்ளாக்  சால்ட்         – 1டீஸ்பூன்
வெங்காயம்           -1 (பொடியாக நறுக்கியது )
கொத்தமல்லி         – சிறிது

செய்முறை

முதலில் மிளகு மற்றும் சீரகத்தை நன்கு பொடி செய்து கொண்டு

பின் பச்சை மிளகாய், புதினா மாற்றும் கொத்தமல்லியை நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்

பின்னர் ஊறவைத்த புளியை 1 1/2  லீட்டர் நீருடன் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளவும்

அந்த நீரில் அரைத்து வைத்துள்ள சீராக பொடி , மல்லி பேஸ்ட் மற்றும் மிளகு சேர்த்து கலந்து அத்துடன் எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து கலந்து தனியாக வைத்து கொள்ளவும்.

பிறகு மைதா, ரவை, பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி, பூரி பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு பாத்திரத்தில் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை போட்டு, அத்துடன், மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு, மாங்காய் தூள், ப்ளாக் சால்ட், வெங்காயம் மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

அடுத்து பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு பூரிகளாக தேய்த்து எண்ணெயில் போட்டு, பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இறுதியில் ஒவ்வொரு பூரியாக எடுத்து, அதனுள் உருளைக்கிழங்கு மசாலா வைத்து, பானி ஊற்றி பரிமாறினால், பானி பூரி ரெடி!!!

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (1)
  • comment-avatar

    Good post. I learn something new and challenging on sites I stumbleupon everyday. Its always interesting to read articles from other authors and practice something from other sites.

  • Disqus (0 )