ஜெ.எம் ராஜா இயக்கும் குறும்படம் அல்வா.

ஜெ.எம் ராஜா இயக்கும் குறும்படம் அல்வா.

கே பாக்யராஜின் உதவியாளர் ஜெ.எம் ராஜா இயக்கும் குறும்படம் அல்வா.
சென்னை : இயக்குனர் கே பாக்யராஜிடம் சித்து பிளஸ் 2 மற்றும் சில படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ராஜா. கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி கலை இயக்குனர் “DRK கிரண் நடித்திருக்கும் குறும்படம் அல்வா நிறைய நகைச்சுவை காட்சிகள் நிறைந்தது .

கோவையைச் சேர்ந்த இவர் சினிமா ஆர்வத்தால் பாக்யராஜிடம் உதவியாளராக வேலைக்குச் சேர்ந்து பணிபுரிந்தார் மற்றும் அவரின் தாயார் ‘மல்லிகா மூவிஸ்’ என்ற பெயரில் பல குறும்படங்களை தயாரித்து இயக்க ஆரம்பித்தார்.
பல படங்களில் பாடல் எழுதிவரும் ஞானவேல் ஒரு பாடலை எழுதியிருக்கிறார். கலை இயக்குனராக பிரியா சுதர்சன், ஒளிப்பதிவாளர் தினேஷ், எடிட்டர் தியாகு, இசையமைப்பாளர் சோகன் பாபு மற்றும் ரோஹித் இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். இதில் நடிகர் தம்பி ராமையா ஒரு பாடலை பாடி அசத்தி இருக்கிறார். 24 நிமிடம் ஓடக்கூடிய நகைச்சுவை கொண்ட குறும்படம் விரைவில் வெளியாகிறது. கோவை ராஜாவின் அல்வா நன்றாக கிண்டப்பட்டு சுவையுடன் அனைவருக்கும் ரசிக்கும் படி கண்டிப்பாக இருக்கும் என்று பலரும் நம்பிக்கை தெரிவித்து வாழ்த்து கூறி வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )