ட்விட்டரில் மீண்டும் Verification விரைவில் அறிமுகம்

ட்விட்டரில் மீண்டும் Verification விரைவில் அறிமுகம்

ட்விட்டரில் மீண்டும் புளூ டிக் வெரிபிகேஷன் வழங்கப்பட்டு வருகிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ட்விட்டர் தளத்தில் பயனாளர்களிடையே வெரிபிகேஷன் டிக் பெறுவதற்கு அதிக போட்டி இருந்து வந்தது. எனினும், புளூ டிக் வெரிபிகேஷன் சேவை 2017 ஆம் ஆண்டு வாக்கில் நிறுத்தப்பட்டது. புளூ டிக் முக்கியத்துவம் அனைவரும் அறிந்த ஒன்றே. பிரபலங்களுக்கு புளூ டிக் வெரிபிகேஷன் கொண்டு நலம் விரும்பிகளை அதிகரித்து கொள்ள முடியும்.

இந்நிலையில், ட்விட்டர் புளூ டிக் வெரிபிகேஷன் சேவை 2021 ஆண்டு துவக்கத்தில் மீண்டும் துவங்கப்பட இருப்பதாக அறிவித்து உள்ளது. இம்முறை வெரிபிகேஷன் சேவையில் அதிக மாற்றங்கள் இருக்கும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

புளூ டிக் வெரிபிகேஷன் பெறுவதற்கான விண்ணப்பங்கள் அடுத்த ஆண்டு துவக்கத்தில் கிடைக்கும். புளூ டிக் பெறுவதற்கான விதிமுறைகளில் ட்விட்டர் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. புதிய விதிமுறைகளின் படி ஏற்கனவே புளூ டிக் வைத்திருப்பவர்களிடம் இருந்தும் புளூ டிக் பறிக்கப்பட இருக்கிறது.

புதிய வெரிபிகேஷன் வழிமுறைகள் பற்றி பயனர்கள் கருத்து தெரிவிக்கலாம் என ட்விட்டர் கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கான கருத்துக்களை பயனர்கள் டிசம்பர் 8 ஆம் தேதிக்குள் சமர்பிக்கலாம்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )