சில நிமிடங்களில் நாமே தயாரிக்க கூடிய முகப்பொலிவு  டிப்ஸ்

சில நிமிடங்களில் நாமே தயாரிக்க கூடிய முகப்பொலிவு  டிப்ஸ்

Face Glow Tips: முக அழகிற்கு கிரீம் தேவை இல்லை இனி இயற்கையான முறையில் நம் முகம் பொலிவுபெற சில வழிகளை நாம் வீட்டிலேயே தயாரிக்கலாம்

 

Home Made Face Tips: நமது தோற்றப்பொலிவை  கவனிக்காமல் விடும் பொழுது அழுத்தம் காரணமாக முகம் சோர்வடைகிறது. அது நமது முகத்திற்கு பொலிவு அற்ற தோற்றம் தரும். அதற்காக நாம்  கிரீம் பாவிக்க நினைக்கிறோம். அதற்குமுன் நாம் இயற்கையான முறையில் எமது முகத்தை பாதுகாக்க முயற்சிக்க வேண்டும்.

முகத்தை உடனடியாக பொலிவடைய செய்ய முட்டைகோஸ்

சரும பிரச்சனைகளுக்கு முட்டைகோஸ்  பயனளிக்க கூடியது.

ஏ ,சி ,டி  ஆகிய மூன்று வைட்டமின்கள் முட்டைகோசில் அடங்கி உள்ளது. சருமத்தை பொலிவாகவும் , இளமையாகவும் வைத்திருக்க இந்த மூன்று வைட்டமிகளும் உதவுகின்றன. கவலையே படாதீர்கள் உங்கள் முகம் உடனடியாக பொலிவடைய வேண்டுமா? முட்டைகோஸை தண்ணிரில் போட்டு கொதிக்க வையுங்கள் அதன் பின்னர் அதை வடிகட்டி அந்த தண்ணீரில் முகத்தை கழுவுங்கள், அதன் பின்னர் நீங்களே உணர்வீர்கள் உங்கள் அழகான முகத்தின் பளபளப்பை.

முகப்பொலிவிற்காக தயிர் ஆலிவ் ஆயில்

உங்கள் சருமத்தை இளமையான பிரகாசம் அளிப்பதற்காக உங்கள் வீட்டில் உள்ள தயிர் போதுமானது தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் வறண்ட சருமத்தை ஈரமாக்கி சருமத்தில் உள்ள நுண் துளைகளை இறுக்கி இளமையான பிரகாசத்தை அளிக்கிறது அதை எப்படி பயன் படுத்துவது என்றால், மூன்று தேக்கரண்டி தயிர்  எடுத்துகொள்ளுங்கள், ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய்யை எடுத்துக்கொள்ளுங்கள் அதை நன்றாக கலந்து முகத்தில் தடவுங்கள் அது உலர ஆரம்பித்ததும் வெதுவெதுப்பான தண்ணீரில் முகம் கழுவ வேண்டும் அதன் பின் உங்கள் முகம் புத்துணர்ச்சியுடன் இருப்பததை  உணர முடியும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )