கனவுகள்

கனவுகள்

கனவு என்பது அன்றாடம் நம் வாழ்வில் நிகழும் நிகழ்வுகளையோ,செயல்பாடுகளையோ புதிய கற்பனை தோற்றத்தில் காட்டுவது ஆகும்..இது பெரும்பாலும் மூளை செல்களுக்கு வேலை/தேடல் இல்லாத பொழுது நிகழும்…மற்ற சமயங்களில் நம் மனதில் எழும் கேள்விகளுக்கும்,எதிர்பார்புகளுக்கும்,எதிர்காலத்தை கணிக்கும் நோக்கிலும் மூளை செயல்பட துவங்கும்.

நாளைக்கு என்ன நடக்கும் ங்குறது சிலருக்கு முந்தைய நாள் கனவில் வரும் அது சில விஷயங்களில் மாறுபட்டும் இருக்கலாம்..இவ்வாறு நம் எதிர்காலம்,தேடல்கள் குறித்து கனவுகள் எழுவதும் அது உண்மையில் நடப்பதும் நிகழ்தகவின் அடிப்படையில் சாத்தியம் தான்..இது மூளையில்  உள்ள நியூரான்களின் செயல்பாடாகும்..நம் எண்ணங்கள் மற்றும் உணர்வுகளை அடையாளப்படுத்தி நியூரான்கள் மூளையில் பல்வேறு காட்சிப்படிமங்களை உருவாக்கும் இந்த காட்சி உருக்கள் எதிர்காலத்தை கணிக்கும் வகையிலும் அமையும் Probability அடிப்படையில்..அதாவது எந்த ஒரு செயல்பாட்டிற்கும் 50% positive and 50% negative results கிடைக்க வாய்ப்புள்ளது…அந்த 50% த்திலும் நமக்கு தேவையான விஷயங்கள் இருக்க மீண்டும் 50% வாய்ப்பு இருக்கும்…அதாவது கனவில் வரும் விஷயங்கள் சில நேரங்களில் மாறுபாட்டோடு உண்மையில் நிகழ்வது தான்…இது பலருக்கும் நடந்திருக்கும் – கனவில் வந்தது நிஜத்தில் நடந்திருக்கும்


REM உறக்கம்..இது பொதுவாக ஒருவர் தூங்கும்போது90 நிமிட இடைவெளியில் நிகழும் இந்த சமயத்தில் தான் கனவுகள் தோன்றுகிறதாக சொல்லப்படுகிறது..நீங்கள் கவனித்தது உண்டா? வெறுமென கண்களை மூடிக்கொள்வதற்க்கும் தூங்கும்போது கண்களை மூடிக்கொள்வதற்க்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு…வெறுமென கண்களை மூடும்போது தெரியும் இருட்டு,தூக்கத்தின் போது குறிப்பாக கனவு காணும்போது தெரியாது ஏனென்றால் REM உறக்க நேரத்தில் உங்கள் புலனுணர்வுகள்(senses) மந்தமாக இருக்கும் அதாவது கண்களில் இருந்து மூளைக்கு தகவல்கள் செல்லும் வேலை நிறுத்தப்பட்டு மாறாக செயற்கையாக உருவாக்கப்பட்ட காட்சிகள் மூளைக்கு அனுப்பப்படும் இதுவும் நீயூரான்களின் வேலை தான்…
இந்த REM உரக்க வேலையில் சில அபூர்வ நிகழ்வுகளும் நடக்கிறது.

.அசாத்தியமான,அச்சமூட்டும்,அதிசய கனவுகளின் தோற்றம்..மேலும் இந்த உறக்க நிலையின் போது external frequencies நம்மை interrupt செய்யும்..அதாவது பிரபஞ்சத்தில் கலந்துள்ள நினைவாற்றல்களோடு தொடர்பு கொள்ளுதல்…(சாமி கனவுல வந்து நேத்திகடன் செய்ய சொல்லுச்சு ன்னு சொல்லுவாங்க ல அந்த மாதிரி)…இது கிட்டத்தட்ட inception படம் மாதிரி தான் ஆனால் இங்கே interrupt செய்வது நினைவாற்றல்கள் தான்….இந்த உறக்கத்தின் போது நம் மூளை அபரிவிதமாக செயல்படும் ஆனால் அதை மறுநாள் நாம் நினைவுகூறுவது கடினம்…

இந்த நேரங்களில் நமக்கு தேவையானதை,நமது எண்ணங்களை நம் மூளையில் விதைத்தால் அதற்கான விடைகளை  கனவின் மூலம் நமக்கு காட்சிப்படுத்தும்…உதாரணத்துக்கு நமது தேவைகளை நம் மனதில் விதைத்தால் அது நோக்கி மூளையில் நியூரான்கள் வேலை செய்ய துவங்கும் இதனால் உருவாகும் கனவுகள் நாம் நினைத்ததை அடைந்து விட்டது போல காட்டும்..இந்த உணர்வை அனுபவித்த நம் உடல செல்கள் அது நோக்கி பயணப்படும்..
சில நேரங்களில் நினைவாற்றல்களின் உதவியோடு நம் கேள்விகளுக்கு விடை கிடைக்கும்…இறந்து போன ஒருவர் அவரது சந்ததிகளின் கனவில் வந்து கூறுவது போல..மேலும்,இதுபோல கனவில் வரும் காட்சிப்படிமங்களுக்கு உள்ள உள் அர்த்தங்களை நமக்கு முன்னர் வாழ்ந்த மக்கள் வகைப்படுத்தி இருந்தனர்(எ.கா : கனவில் பாம்பை கண்டால் கெட்டது நடக்கும்)

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (1 )