அழகியாக வேணுமா? அப்போ, இதோ இலகுவான இயற்கை அழகு குறிப்புகள்!

அழகியாக வேணுமா? அப்போ, இதோ இலகுவான இயற்கை அழகு குறிப்புகள்!

உச்சி முதல் பாதம் வரை உடல் அழகுபெற இயற்கை அழகு குறிப்புகள் இதோ!..

சருமத்தில் உள்ள எண்ணெய்பசை நீங்க

சிலருக்கு சருமத்தில் எண்ணெய் வழிந்துகொண்டே இருக்கும் அப்படி பட்டவர்கள் இந்த ஃபேஸ் பேக் இனை அப்ளை செய்யுங்கள் சரியாகிவிடும்.

ஒரு சுத்தமான பவுலில் ஒரு ஸ்பூன் முல்தானி மெட்டி, ஒரு ஸ்பூன் சந்தனம் மற்றும் தேவையான அளவு காய்ச்சாத பசும்பால் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை சருமத்தில் அப்ளை செய்து பின் 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும். பின் குளிர்ந்த நீரால் சருமத்தை கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் 2 முறை தொடர்ந்து செய்து வர சருமம் எண்ணெய் பசையற்று பட்டு போல் மின்னும்.

சருமம் பொலிவுபெற,

சருமத்திற்கு கிரீம்கள், லோசன்கல் பயன்படுத்துவதற்கு பதிலாக, தேங்காய் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெய் தடவினால், சருமம் மென்மையாக, ஈரப்பதத்துடன் சுருக்கமின்றி காணப்படும்.

கூந்தல் பராமரிப்பு

தேங்காய் எண்ணெய் வெதுவெதுப்பாக சூடேற்றி தலைக்கு தடவி நன்கு 20 நிமிடம் மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊறவைத்து குளித்தால், முடி வளர்ச்சி அதிகரிப்பதோடு முடி அடர்த்தியாக வளரும்.

குறிப்பாக இரவில் மசாஜ் செய்துவிட்டு காலையில் குளித்தால் நல்ல பலனை பெறலாம்.

தயிர்


கூந்தலுக்கு கெமிக்கல் நிறைந்த கண்டிஷனர் பயன்படுத்துவதற்கு பதிலாக தயிரை பயன்படுத்தினால், கூந்தல் நன்கு பட்டு போன்று மென்மையாக இருக்கும். முடி உதிர்வு பிரச்சினை நீங்கி, முடி அடர்த்தியாக வளர உதவி செய்யும்.

எலுமிச்சை


கூந்தல் அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர எலுமிச்சை மிகவும் உதவி செய்கின்றது, அதாவது எலுமிச்சை சாறுடன் சிறுது தயிர் கலந்து தலைக்கு மசாஜ் செய்து, பின்பு சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் தலை அலச வேண்டும்.இவ்வாறு வாரத்தில் 2 முறை செய்து வர தலை சுத்தமாக காணப்படும். மேலும் பொடுகு தொல்லை நீங்கும், முடி உதிர்வு பிரச்சினை தடுக்கப்படும்.

உதடு மென்மையாக

உதடு மென்மையாக மற்றும் வறட்சியின்றியும் இருப்பதற்கு லிப் பாம் பயன்படுத்தாமல், சிறிது நெய்யை தடவி வந்தால் , உதடுகளில் வெடிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம். இவ்வாறு செய்வதினால் உதடு மென்மையாக மற்றும் வறட்சியின்றியும் காணப்படும்.

அழகான பாதம் பெற,

பாதங்கள் அழகாக இருந்தால் கூடுதல் அழகு தரும். அழகான செருப்புகளை போடலாம். குதிகால்களை மறைக்கும்படி செருப்புகளை தேட வேண்டிய அவசியமில்லை.

பாதங்களிலுள்ள சொரசொரப்பு நீங்க : ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை பழ தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். இது கால் வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தை சுத்தமாக்கும் மேலும் கிருமிகள் தங்காது.

கடுகு எண்ணெயை தினமும் கால் பாதம் மற்றும் கைகளில் தேய்த்து கழுவி வந்தால், சொரசொரப்பு நீங்கும். மென்மையான பாதங்களாக திகழும். தினமும் தூங்குவதற்கு முன் விளக்கெண்ணெயை பாதத்தில் தேயுங்கள். சொரசொரப்பான பாதம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது.

மிருதுவான பாதங்கள் கிடைக்க : தயிரை பாதங்களில் தடவி, பிரஷினால் வெடிப்புகளில் தேய்க்க வேண்டும். மறுநாள் உப்பு அல்லது சோடா உப்பை குதிகால்களில் தேய்த்து, கழுவ வேண்டும். தொடர்ந்து இப்படி மாறி மாறி வாரம் மூன்று முறை செய்தால் பாதம் மெத்தென்று ஆகும். வெந்தயக் கீரையை அரைத்து கை, கால்களில் தேய்த்து விட்டு 15 நிமிடம் கழித்து கழுவி வந்தாலும், மென்மையான பாதங்கள் கிடைக்கும்.

வெடிப்பு மறைய : மருதாணி பவுடருடன் டீத்தூள், தேங்காய் எண்ணெய் கலந்து பாதங்களில் தேயுங்கள். 10 நிமிடன்ம் கழித்து பாதத்தை கழுவலாம். இது கால் வெடிப்பை நீக்கி உடலை குளிர்ச்சியாக இருக்க உதவுகிறது. மருதாணி இலையுடன் எலுமிச்சை சாறு விட்டு விழுதாக அரைத்து கால் வெடிப்பில் பூசி வர கால் வெடிப்பு குணமாகும்.

மேலும் இயற்கையான அழகு குறிப்புகள்!

அரிசி களைந்த நீர் – தினமும் அரிசி களைந்த நீரில் முகம் கழுவினால் சருமத்தில் உள்ள அழுக்குகள், எண்ணெய்பசை மற்றும் கரும்புள்ளிகள் அற்ற பொலிவான சருமத்தை பெறலாம்.

வெள்ளரிக்காய் – வெள்ளரிக்காயை வட்டமாக வெட்டி கண்களில் சிறிது நேரம் வைத்திருந்தால் கண்களில் சோர்வு நீங்கி கருவளையங்களும் குறைந்துவிடும். எனவே கண்களின் அழகை அதிகரிக்க வெள்ளரிக்காயை பயன்படுத்தி பாருங்கள், மாற்றம் தெரியும்.

ஆவி பிடித்தல் – ஆவி பிடிப்பதனால் சருமத்தில் உள்ள செல்களுக்கு புத்துயிர் கிடைக்கின்றது. சருமத்தை ஆரோக்கியமாக பாதுகாக்கவும், சருமம் பொலிவாக இருக்க மற்றும் சருமத்தில் வரும் பருக்கள் மறையவும் தினமும் ஒரு முறையாவது ஆவி பிடிப்பது மிக நல்லது. இதனால் சருமம் என்றும் பொலிவுடன் காணப்படும்.

பழங்களில் மாஸ்க் – முகம் பொலிவுடன் இருக்க வேண்டும் என்று கடைகளில் விற்கும் ஃபேஸ் மாஸ்க்குகளை போடுவதற்கு பதிலாக, பலன்களை வைத்து மாஸ்க் போட்டால், அதில் உள்ள சத்துக்கள் முகத்தை பளிச்சென்று பொலிவுற வைக்கும்.

அதிலும் மாம்பழம், பப்பாளி, ஆணை கொய்யா, எலுமிச்சை, திராட்சை போன்றவை மாஸ்க் போடுவதற்கு மிக சிறந்தவையாகும்.

 

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )