இதோ!! எல்லா வகையான பண்டிகைக்கும் சுலபமாக, எளிமையாக சட்டுனு செய்யக் கூடிய  ரவை கேசரி!

இதோ!! எல்லா வகையான பண்டிகைக்கும் சுலபமாக, எளிமையாக சட்டுனு செய்யக் கூடிய ரவை கேசரி!

ரவை கேசரி

நம் வீட்டில் வரக்கூடிய எல்லா வகையான பண்டிகைக்கும் சுலபமாக, எளிமையாக சட்டுனு 10 நிமிடத்தில் செய்யக் கூடிய இனிப்பு பலகாரம் தான் இந்த ரவை கேசரி. இருப்பினும் இந்த ரவை கேசரியை பக்குவமாக சில பேருக்கு செய்யத் தெரியாது. குறிப்பாக கல்யாண வீடுகளில் அல்வா பதத்தில் ரவை கேசரி செய்வார்கள். அந்தப் பக்கத்தில் நம்முடைய வீட்டில் சுலபமான முறையில், எந்தெந்த அளவுகளை வைத்து ரவை கேசரி செய்ய வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

தேவையான பொருட்கள்

ரவை – 1 டம்ளர்
சீனி – 2 டம்ளர்
தண்ணீர் – 1 1/2 டம்ளர்
நெய் – 1/2 டம்ளர்
கேசரி பவுடர் – தேவையான அளவு
உலர் திராட்சை – சிறிதளவு
முந்திரி – சிறிதளவு
ஏலக்காய் – 4

செய்முறை

முந்திரியை சிறிதுசிறிதாக நறுக்கி கொள்ளவும். ஏலக்காயை தூள் செய்து கொள்ளவும். நெய்யை உருக்கி கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து 2 தேக்கரண்டி நெய் ஊற்றி நறுக்கிய முந்திரி மற்றும் உலர் திராட்சையை பொன்னிறமாக வறுத்து தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளவும்.

அதே நெய்யில் ரவையை இட்டு வாசம் வரும் வரை சிவக்க வறுக்க வேண்டும். இதையும் ஒரு தட்டில் எடுத்து மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

தண்ணீரை வாணலியில் கொதிக்க வைத்து அதில் கொஞ்சம் கொஞ்சமா ரவையை கொட்டி கட்டியாகாமல் நன்றாக கிளறவும்.ரவை நன்றாக வெந்ததும் சீனியை சேர்த்து கிளறவும். சீனியை கொட்டிய பின்பு, ரவை வேகாது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. எனவே ரவை வெந்ததும் சீனியை இடவும்.

கேசரி பவுடரை தண்ணீரில் கரைத்து அதனுடன் சேர்த்து நன்றக கிளறவும்.உருக்கிய நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கைவிடாமல் கிளறிக்கொண்டே வரவும். இறுதியாக வறுத்த முந்திரி உலர் திராட்சை மற்றும் ஏலக்காயை சேர்த்து கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பொது இறக்கி விடவும்.

கரண்டியில் இந்த ரவை கேசரியை எடுத்து, அழுத்தமாக ஒரு பிளேட்டில் வைத்து தட்டி அலங்காரம் செய்து பரிமாறுங்கள்.

இதோ! இப்பொழுது சிறுவர் முதல் பெரியோர் வரை விரும்பி உண்ணும் நாவூறும் பதமான ரவை கேசரி தயார்! உங்க வீட்ல இருக்கிறவங்க எல்லோருக்கும் பரிமாருங்க, சுவையில் அசந்தே போவாங்க..

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )