சுற்றுலா பயணிகளை தெறிக்கவிடும் இலங்கையின் அசத்தலான சேர எல்ல நீர்வீழ்ச்சி

சுற்றுலா பயணிகளை தெறிக்கவிடும் இலங்கையின் அசத்தலான சேர எல்ல நீர்வீழ்ச்சி

சேர எல்ல (இயற்கையை விரும்புவோருக்கும் சில சாகசங்களை விரும்புவோருக்கும் உகந்த இடம்.)

அமைவிடம்

மாத்தளை மாவட்டம், எழில்மிகு இயற்கை அழகுடன் கூடிய பல சுற்றுலா தளங்களைக் கொண்ட இடமாகும். அத்தோடு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வண்ணம் அழகிய மலைத்தொடர்கள், ஆறுகள், நீர்வீழ்ச்சிகள், மற்றும் பல இரசனைமிகு இடங்களை கொண்டு மத்திய மலை நாட்டில் மத்தியில் அமைந்துள்ள ஒரு பிரதேசமாகும்.

சேர எல்ல மாத்தளை மாவட்டத்தில் லக்கலவிற்கு அருகிலுள்ள பொத்தடவெல கிராமத்தில் அமைந்துள்ள ஒரு நீர்வீழ்ச்சி ஆகும். இந்த அழகிய நீர்வீழ்ச்சி இயற்கையை விரும்புவோருக்கும் சில சாகசங்களை விரும்புவோருக்கும் உகந்த இடமாகும்.

சிறப்பம்சம்

இது உயரத்தை விட அகலமான அருவி ஆகும்(உயரம் 10m , அகலம் 15 – 20m).
இந் நீர்வீழ்ச்சியின் மற்றொரு சிறப்பம்சம், பாறையில் இயற்கை குகை நீர்வீழ்ச்சிக்கு பின்னால் அமைந்துள்ளது, அங்கு அமைந்துள்ள படிக்கட்டினூடாக ஏறிச்சென்று அழகிய நீர்வீழ்ச்சியை நீர் மேலிருந்து அழகாக கொட்டும் விதத்தை நீங்கள் இரசிக்கலாம். இது கண்கொள்ளாக் காட்சியாகும்.

டிசம்பர் முதல் ஏப்ரல் வரை சேர எல்ல க்கு செல்ல சிறந்த காலப்பகுதி ஆகும். உங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது நீங்கள் பார்க்க வேண்டிய அரிய நீர்வீழ்ச்சி  இது….

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )