சர்வைவர் நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார்? கசிந்த விபரம்..!

சர்வைவர் நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார்? கசிந்த விபரம்..!

சர்வைவர் நிகழ்ச்சியின் முதல் சீசனின் வெற்றியாளர் யார் என்ற விபரம் இணையத்தில் உலாவிவருகின்றது.

சமீபத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் அட்டகாசமாக தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியில் முதலில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் காடர்கள், வேடர்கள் இரு அணிகளாக பிரித்து சவால்களை எதிர்கொண்டு வந்தனர்.
அதைத்தொடர்ந்து 2 போட்டியாளர்கள் வைல்டு கார்ட் எண்ட்ரியாக நுழைந்தனர். இந்நிகழ்ச்சி தொடங்கிய சில நாட்களிலேயே போட்டியாளர்களுக்குள் சண்டை தொடங்கியது. பின் வாரா வாரம் எலிமினேஷன் நடைபெற்று வருகிறது.

இந்த காடுகளில் கொடுக்கப்படும் டாஸ்குகளை சரிவர செய்து தங்களின் வலிமையை நிரூபிக்கும் போட்டியாளருக்கே ரூபாய் ஒரு கோடி பரிசுத் தொகை மற்றும் சர்வைவர் என்ற பட்டம் கிடைக்கும் என அறிவித்தனர்.

நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் இச்ச்சமயத்தில் இந்நிகழ்ச்சியின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், சர்வைவர் நிகழ்ச்சியின் முதல் சீசனின் வெற்றியாளர் நடிகை விஜயலட்சுமி எனவும் இணையத்தில் விபரம் கசிந்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )