மாஸ் காட்டும் சுற்றுலா தளம் : அம்புலுவாவ கோபுரம்

மாஸ் காட்டும் சுற்றுலா தளம் : அம்புலுவாவ கோபுரம்

அம்புலுவாவ கோபுரம் : இலங்கை

அம்புலுவாவ கோபுரம் இலங்கையில் மத்திய மலைநாட்டில் கம்பளை நகரில் அமைந்துள்ளது. இக் கோபுரம் பிரபலமான ஒரு சுற்றுலா தலமாக அமையக் காரணம் அதன் அழகிய அமைவிடமும் கோபுரத்தின் உச்சியில் இருந்து பார்க்கும் போது தென்படும் அழகான இயற்கை காட்சிகளும் ஆகும். இது மிக குளிர்ச்சியான அழகிய மத்திய மலைநாட்டில் அழகை இரசிக்க உகந்த இடமாகும். அழகிய குறுகிய படிக்கட்டுகளில் ஏறுவதன் மூலம் கோபுரத்தின் உச்சியை அடைய முடியும். சவால் மிக்க பயணத்திற்கு மிக உகந்த இடமாக இது அமையும்.

அம்புலுவாவ கோபுரம் : அமைவிடம்

அம்புலுவாவ கோபுரம் இலங்கையின் கடல் மட்டத்தில் இருந்து 3567 அடி உயரத்திலும் கம்பளை நகரில் இருந்து 1000 அடி உயரத்திலும் அமைந்துள்ளது. இதனை சுற்றியுள்ள பகுதியில் வேறு மலைகள் இல்லாத காரணத்தினாலும் இதன் தனிச்சிறப்பின் காரணத்தினாலும் தொலைதூரத்தில் இருந்து மிக அழகிய காட்சியை பெற்று தருகின்றது. கம்பளை புகையிரத நிலையத்தில் இருந்து இக்கோபுரம் தெரியும்.

அமைவிடம் (GOOGLE MAP LOCATION ) 

இலங்கையின் சிறந்த சுற்றுலா தளம்

உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்ந்திலுக்கும் இடமாக இது அமைந்துள்ளது. விடுமுறை நாட்களில் அல்லது நேரம் கிடைக்கும் போது மனதிற்கும் உடலிற்கும் புத்துணர்ச்சி தரும் மிக அழகிய குளுமையான இவ் இடத்திற்கு நாமும் சென்று அழகை அனுபவித்து இரசிப்போம்.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )