விக்ரம் : வேற லெவல் திரையனுபவம்

விக்ரம் : வேற லெவல் திரையனுபவம்

விக்ரம் 2022

1986-ல் வெளியான விக்ரம் படத்திற்கு பின் விக்ரம் என்ற பெயர் கொண்ட கதாபாத்திரத்தில் கமல் நடித்து வெளியாகியிருக்கும் படம் தான் விக்ரம்.
ராஜ் கமல் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் வெளியீட்டில் கமல் ஹாசன், பகத் பாசில்,விஜய் சேதுபதி ஆகியோர் பிரதான வேடங்களில் நடிக்க அனிருத் இசை அமைத்துள்ளார்.

முதல்பாதி

பகத் பாசிலின் அடக்கமும் அட்டகாசமுமான‌ நடிப்பில் நகரும் முதல் பாதி அருமை. உச்சக்கட்ட எதிர்பார்ப்புடன் உருவாக்கப்பட்டிருக்கும் இடைவேளைக் காட்சி, சற்றே நீளமான முதல்பாதியின் அயர்ச்சியை போக்கிவிடுகிறது.

அசத்தும் இரண்டாம் பாதி

கமல்ஹாசனுடைய தீவிர இரசிகனான லோகேஷ், கமலுக்காகவே மாஸ் காட்சிகளை அடுக்கி அதகளம் பண்ணியிருக்கிறார். கிட்டத்தட்ட 3 வருடங்களின் பின்னர், திரையில் தோன்றும் கமல் தனது அனுபவ முதிர்ச்சியை பக்காவாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

சிறப்பான திரையனுபவம்

ஹொலிவூட் படங்களுக்கு நிகரான‌ காட்சியமைப்பு, கதாபாத்திர்ங்க்ளுக்கு போதுமான முக்கியத்துவம் மாஸான பின்னனி இசை என மிகச்சிறந்த திரையனுபவத்தை தருகிறது விக்ரம். படக்க்குழுவினரின் கடின உழைப்புக்கு வாழ்த்துக்கள்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )