ஆடி மாதத்தின் சிறப்புகள்.

ஆடி மாதத்தின் சிறப்புகள்.

ஆடி மாதம் என்றாலே ஏன் இத்தனை சிறப்புக்கள்?

தமிழ் மாதங்களிலே ஆடி மாதம் முக்கிய மாதமாக கருதப்படுகின்றது. ஆடி மாதம் என்றாலே ஏன் இத்தனை சிறப்புக்கள்? என்று இப்பதிவில் பார்ப்போம்.

ஆடி மாதம் என்றாலே அம்மன் மாதம் என்று தான் சொல்லப்படுகின்றது. இந்து சமயத்தைச் சோ்ந்த தமிழா்களுக்கு ஆடி மாதம் ஒரு முக்கிய ஆன்மீக மாதம் ஆகும். இந்த மாதத்தில் இந்து சமயத்தைச் சோ்ந்த தமிழ் மக்கள் சூாிய கடவுள்களுக்கும், அம்மனுக்கும் (சக்தி) பலவிதமான பூஜைகளை செய்து வழிபடுவா்.

பெண்மை எனும் சக்திக்கு பெருமை சேர்க்கும் மாதம் ஆடி மாதம். ஆடி மாதத்தில் சிவனின் சக்தியைவிட அம்மனின் சக்தி அதிகமாக இருக்கும். பார்வதியின் தவத்தை மெச்சிய பரமசிவன் ஆடிமாதம் அம்மனின் மாதமாக இருக்க வேண்டும் என வரம் கொடுத்தார். எனவேதான் இந்த மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகிவிடுகிறார் என்பது ஐதீகம். சூறை காற்றோடு அம்மனின் அருட்காற்று அரவணைக்கும் மாதம்தான் ஆடி மாதம்.

மழைகாலத் துவக்கமான ஆடியில் நல்ல மழை வேண்டியும் உடல் நலம் பெறவும், நோய்கள் பரவாமல் இருக்கவும் நம் முன்னோர்கள் பல பண்டிகைகளைக் கொண்டாடி அம்மனுக்கு வழிபாடு நடத்தினார்கள். ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் கூழ் ஊற்றி வணங்குவார்கள். நோய்கள் நீங்கவும் ஆரோக்கியம் அதிகரிக்கவும் கூழ் வார்த்து வழிபடுகின்றனர்.

ஆடி மாதக் கொண்டாட்டங்கள்

தமிழ் மக்கள் மத்தியில் ஆடி மாதம் ஆன்மீக காாியங்களுக்கான மாதமாகக் கருதப்படுகிறது. அதனால் இந்த மாதம் முழுவதும் அம்மனுக்குாிய பூஜைகள், சடங்குகள் மற்றும் வேண்டுதல்கள் செய்ய வேண்டும் என்பதற்காக திருமணம் போன்ற பலவிதமான சுபகாாியங்களை செய்யாமல், நிறுத்தி வைப்பா்.

உலகம் முழுவதும் பரவி இருக்கும் தமிழா்கள் இந்த ஆடி மாதத்தை கொண்டாடி மகிழ்கின்றனா். ஆடி மாதத்தில் வரும் விசேஷங்களை பார்ப்போம்.

ஆடி செவ்வாய்

ஆடி மாத பிறப்பே இறை வழிபாட்டுக்கு உரிய நாள். ஆடியில், செவ்வாய்க்கிழமைதோறும் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பதால், மாங்கல்ய பலம் கூடும். அதேபோன்று ஆடி மாதச் செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் ஒளவையார் விரதம் கடைப்பிடிக்கும் வழக்கமும் உண்டு. கணவனின் ஆயுள் நீடிக்கவும், குழந்தை வரம் வேண்டியும், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கவும், கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமண வரம் கிடைக்கவும் இந்த விரத வழிபாட்டின் மூலம் பிரார்த்தித்துக் கொள்வார்கள்.

ஆடி வெள்ளி

ஆடி வெள்ளிக்கிழமையன்று சுமங்கலிப் பெண்கள் கணவனின் ஆயுள் அதிகரிக்கவும், திருமணமாகாத பெண்கள் விரைவில் திருமணம் கூடி வரவும் விரதம் மேற்கொள்கின்றனர்.

ஆடிக்கார்த்திகை

கார்த்திகை என்ற நட்சத்திரம் முருகப் பெருமானுக்கு உகந்த நட்சத்திரம். மாதம்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பு வாய்ந்தது. உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள்.

ஆடி அமாவாசை

ஆடி அமாவாசை முன்னோர்களுக்கு திதி கொடுக்க சிறப்பான நாளாகும். ஆடி அமாவாசையை பித்ருக்கள் தினமாகக் கடைபிடித்து அன்று இறைவனடி சேர்ந்த நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் நிறைவேற்றினால், ஆறு மாதம் தர்ப்பணம் செய்த பலன் கிடைக்கும். சூரிய, சந்திரனை தந்தை, தாய் இழந்தவர்கள் அமாவாசை, தினங்களில் வழிபாடு செய்வது சிறப்பாகும்.

ஆடி பூரம்

ஆண்டாள் அவதரித்த தினம் ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் ஆகும். பூமா தேவியே ஆடிப்பூர நாளில் ஆண்டாளாக அவதரித்தாள் என்கின்றன புராணங்கள். ஆடிப்பூரம் அம்பாளுக்குரிய விசேஷ தினமாகும். ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரத்தில் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.உலக மக்களை காப்பதற்காக அம்பாள், சக்தியாக உருவெடுத்த தினம் ஆடிப்பூரம் என்று கூறப்படுகிறது.

ஆடிப்பெருக்கு

ஆடி மாதத்தின் மிகவும் முக்கியமான ஒரு விழா ஆடிப்பெருக்கு ஆகும். ஆடி மாதத்தின் 18 ஆம் நாள் ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது.

ஆடிப்பெருக்கன்று நதிகளை வழிபடுவதன் மூலம் நீர்வளம் பெருகும் என்பது நம்பிக்கை. அதே போல திருமணமான பெண்கள் மாங்கல்ய பலம் பெருகவும், திருமணமாகாத பெண்கள் மனதிற்கு பிடித்த கணவரை மணக்கவும் இந்த ஆடிப்பெருக்கு நாளில் அம்பிகையை வேண்டிக்கொள்வது வழக்கம். ஆடிப்பெருக்கு நாளில் செய்யும் செயல்கள் பல்கி பெருகும் என்பது ஐதீகம். ஆடிப்பெருக்கன்று விரதம் இருந்து இறைவனை வணங்குவதன் மூலம் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.

ஆடிப்பெருக்கன்று செய்யும் செயல்கள் பல்கி பெருகும் என்பது ஐதீகம். அன்றைய தினம் அனைவரும் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கலாம். தங்கம், வெள்ளி வாங்கலாம். வீட்டின் பூஜை அறையில் தங்கம், வெள்ளி காசுகள், நாணயங்களை வைத்து வணங்கி அதை பீரோவில் வைக்க செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.

 

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )