மாத்தளையில் மாசிமக திருவிழா

மாத்தளையில் மாசிமக திருவிழா

மாத்தளையில் மாசிமக திருவிழா

இலங்கையில் மத்திய மலைநாட்டின் மாத்தளை மாநகரின் மத்தியில்அமைந்துள்ள இலங்கையின் பிரசித்திபெற்ற வரலாற்று சிறப்புமிக்க மாத்தளை ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த தேர் திருவிழா (மாசிமக மகோற்சவம்) 26.01.2022 அன்று கொடி ஏற்றத்துடன் இனிதே ஆரம்பமாகி 17.03.2022 அன்று பஞ்சரதபவனி(தேர் திருவிழா) இடம்பெற உள்ளது.

கோவில் வரலாறு

இக்கோவில் தென்னிந்திய வர்த்தகர்களால் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டது. பின் 1852 ஆம் ஆண்டு தியாகராஜா செட்டியாரால் கட்டப்பட்டது. இன்று பல முன்னேற்றங்களுடன் 108 அடி உயரமான ராஜ கோபுரத்துடன் மிக கம்பிரமாக மாத்தளை நகரின் கண்கொள்ளா காட்சியாக அமைந்துள்ளது.

மாசிமக மகோற்சவம் (தேர் திருவிழா)

மாசிமக மகோற்சவத்தில் மாத்தளை வாழ் மக்கள் மட்டுமன்றி இலங்கையின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து அம்பாளின் அருளினை பெற்று செல்கின்றனர். பிள்ளையார், சிவன் அம்பாள், முருகன், முத்து மாரியம்மன் மற்றும் சண்டேசுவரி ஆகிய தெய்வங்கள் ஐந்து தேர் இரதங்களில் நகரினை வலம் வந்து மக்களுக்கு அருள் பாலிக்கின்றனர். கோவில் வளாகத்தில் இருந்து ஐந்து தேர் ரதங்களை ஊர்வலமாக எடுத்து சென்று மீண்டும் கோவிலுக்கு கொண்டு வருவது மிகவும் மத மற்றும் புனிதமான சடங்கு நிகழ்ச்சிகளாக கருதப்படுகின்றது.

விழாக்கோலம் பூணும் மாத்தளை நகர்

மாசிமக திருவிழா ஆரம்பமானதுடன் மாத்தளை நகர் விழாக்கோலம் பூண்டு மிக அழகாக காட்சியளிக்கும். இலங்கையில் பல பகுதிகளில் இருந்து வர்த்தகர்கள் வருகை தந்து தற்காலிகமான சிறிய கடைகள் அமைத்து வியாபாரத்தில் ஈடுபடுவர். மக்கள் வீடுகள் மற்றும் கடைகளை வாழைமரம்,தோரணம் கொண்டு அலங்கரித்து தேர் திருவிழாவிற்கு ஆயத்தமாவர். இந்துக்கள் மற்றுமின்றி மற்ற மதத்தவரும் தேர் திருவிழாவினை மிக ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருப்பர். மாத்தளை முத்துமாரி அம்மன் கோவிலின் இந்த தேர் திருவிழா இந்துக்கள், பௌத்தர்கள், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் ஒற்றுமையின் அடையாளமாக கருதப்படுகின்றது.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )